நீரிழிவு (சர்க்கரை நோய்) உடல் முழுவதும் பல வகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதில் முக்கியமான ஒன்றாகக் கண்களில் ஏற்படும் நீரிழிவு ரெட்டினோபதி (Diabetic Retinopathy) காணப்படுகிறது. நீண்ட காலம் கட்டுப்பாடின்றி சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கண்களில் உள்ள ரத்தக் குழாய்களில் சேதம் ஏற்படும். இது படிப்படியாக பார்வை குறைதல், திரை மங்கல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். இதே நேரத்தில், மாகுலார் எடிமா (Macular Edema) என்ற நிலையும் ஏற்படலாம். இதில் பார்வைத் தெளிவை ஏற்படுத்தும் மையப் பகுதியான மாகுலா பகுதியில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்படும்.
நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சை பல்வேறு கட்டங்களில் வழங்கப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில், சர்க்கரை அளவை சீராக பராமரிப்பது முக்கியம். அவ்வப்போது கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வதும் அவசியம். மேம்பட்ட நிலைகளில், லேசர் சிகிச்சை, இன்ஜெக்ஷன் சிகிச்சை (Anti-VEGF), மற்றும் சில சமயங்களில் அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம். மாகுலார் எடிமா க்கும் Anti-VEGF இன்ஜெக்ஷன் மிகவும் பயனளிக்கிறது. இவை கண்களில் திரவம் தேங்கி பார்வை குறைவதை தடுக்கும்.
நீரிழிவு ரெட்டினோபதி ஏற்படும் காரணங்கள்:
- நீண்டகால சர்க்கரை கட்டுப்பாட்டின்மை
- உயர் இரத்த அழுத்தம்
- உயர் கொழுப்பு
- கர்ப்பகால நீரிழிவு
- உடல் எடையின்மை அல்லது அதிகப்படியான உடல் எடை
நீர் இழிவு ரெட்டினோபதி மற்றும் மாகுலார் எடிமா போன்ற நிலையில் உடனடி சிகிச்சை மிகவும் அவசியம். தாமதமானால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சரியான கட்டுப்பாடு, முறையான பரிசோதனை மற்றும் சிகிச்சை மூலம் பார்வையை பாதுகாக்க முடியும். அதற்காக நிபுணர்களின் வழிகாட்டுதல் முக்கியம்.
தி ஐ ஃபவுண்டேஷன் - இல் நீரிழிவு ரெட்டினோபதி சிகிச்சை மற்றும் மாகுலார் எடிமா க்கான உயர் தர சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன. உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க இன்றே நிபுணர்களை அணுகுங்கள். உங்கள் நேரத்தை முன்பதிவு செய்யுங்கள் உங்கள் பார்வை எதிர்காலத்தை பாதுகாக்க இதுவே சிறந்த நேரம்!