கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் இந்த பிரச்சனையை ‘சைலன்ட் கில்லர்’ என்கின்றார் கோவை மருத்துவர். 40 வயதை நெருங்குபவர்களுக்கு குளுக்கோமா பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்.
குளுக்கோமா என்றால் என்ன?
இந்த கண் அழுத்த நோயானது எந்த வித அறிகுறியும் இல்லாமல் ஒருவரது பார்வையை பாதிக்கும். பாதிப்பை உணர்ந்த பின்னரே இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரியவரும். இந்த நோயின் தன்மை, சிகிச்சை முறைகள் மற்றும் வருமுன் காப்பது எப்படி என்பது குறித்து கோவை தி.ஐ.பவுண்டேசன் மருத்துவமனை மருத்துவர் முரளிதர் கூறியதாவது, “உலக குளுக்கோமா வாரம் என்பது குளுக்கோமா நோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்துவதற்காக குளுக்கோமா சங்கத்தின் ஒரு முயற்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் பேர் இவ்வகை நோயினால் தாக்கப்படுகின்றனர்.
மருத்துவ செலவு எவ்வளவு?
குளுக்கோமா அறுவை சிகிச்சைக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். எங்கள் மருத்துவமனையில் இந்த வாரத்தில் குளுக்கோமா இலவச ஆலோசனை மற்றும் அறுவை சிகிச்சைகளை சலுகை கட்டணத்தில் வழங்குகிறோம். உலக நடைமுறைகளை அறிந்துகொள்ள உதவுவது நமது கண்கள் தான். கண்களை முறையாக பராமரிக்க வேண்டும்” இவ்வாறு மருத்துவர் முரளிதர் கூறினார். Read more