Eye Foundation Team

Our Blogs

பனிக்காலத்தில் கண்களை பாதுகாக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்

Responsive image

பனிக்காலம் வந்துவிட்டாலே உடல் முழுவதும் குளிர்ச்சியான உணர்ச்சி வரும். ஆனால் இதே நேரத்தில் நம் கண்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படும் season இதுதான். குளிர்ந்த காற்று, பனி, உலர்ந்த சூழல், அதிகமான AC/ஹீட்டர் பயன்பாடு போன்றவை கண்களில் உலர்வு, எரிச்சல், சிவப்பு, allergy, infection போன்ற பிரச்சனைகளைக் கொண்டு வரக்கூடும். பனி கால கண் பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றினால் இப்படியான பிரச்சனைகளில் பெரும்பாலானவற்றை தவிர்க்கலாம்.

பனி காலத்தில் கண்களில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்

 கண் உலர்ச்சி

காற்றில் ஈரப்பதம் குறைவதால் கண்களில் tear film குறையும். இதன் விளைவாக கண்ணீர் வருவது, dry sensation, எரிச்சல் போன்றவை அதிகரிக்கும்.

 கண் சிவப்பு

குளிர்காற்று கண்களின் மேற்பரப்பை பாதிப்பதாலும், allergy காரணமாகவும் ஏற்படும்.

Conjunctivitis

வெளியில் அதிக நேரம் செலவிட்டால் காற்றில் உள்ள தூசி மற்றும் கிருமிகள் infection ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

Vision blur

எரிச்சல் அல்லது dryness அதிகமானால் சில நேரங்களில் மங்கலான பார்வை ஏற்படும்.

 பனி கால கண் பராமரிப்பு வழிமுறைகள்

1. கண்களை உலர்ச்சியிலிருந்து பாதுகாக்கவும்

குளிர் சூழலில் tear evaporation வேகமாக நடக்கும். எனவே

  • நீண்ட நேரம் வெளியே நிற்பதை தவிர்க்கவும்
  • காற்று எதிரே வரும் சூழலில் கண்களை மூடிக்கொள்ளுங்கள்

 2. Artificial tears மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்

கண்கள் உலர்ந்தால் சாதாரண eye drops மூலம் தற்காலிக நிவாரணம் கிடைக்கலாம். ஆனால் மருத்துவர் பரிந்துரைத்த drops பயன்படுத்துவது பாதுகாப்பானது.

3. கண்களுக்கு moisture தரும் உணவுகள் சாப்பிடுங்கள்

  • பாதாம்
  • வால்நட்
  • பச்சைக்கீரை
  • காரட்
    இவை Vitamin A வழங்கி கண் ஆரோக்கியத்திற்கு நல்லது.

4. ஹீட்டர் அதிக நேரம் பயன்படுத்தாமல் இருங்கள்

வீட்டில் heater பயன்படுத்தும்போது காற்று உலர்ச்சி அதிகரிக்கும்.
 காற்றில் ஈரப்பதம் காக்க humidifier பயன்படுத்தலாம்.

 5. வெளியில் செல்லும் போது கண் பாதுகாப்பு

பனிக்கால காற்றில் தூசி, துகள்கள் அதிகம்.

  • UV sunglasses
  • eye protection glasses
    பயன்படுத்தலாம். 

6. கண்களை அடிக்கடி தேய்க்க வேண்டாம்

குளிர்ச்சியால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டாலும் கைகளைப் பயன்படுத்தி தேய்க்கக் கூடாது.
அது infection ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

7. screen usage குறைக்கவும்

  • குளிர்காலத்தில் வீட்டுக்குள் இருப்பதில் mobile, laptop, TV அதிக நேரம் பார்ப்பது வழக்கம்.
    இதனால் கண் உலர்வு மேலும் அதிகரிக்கும். 
  •  20–20–20 rule பயன்படுத்துங்கள் 20 நிமிடம் பயன்படுத்திய பிறகு 20 விநாடி தூரத்தில் உள்ள பொருளைப் பாருங்கள்.

8. contact lens பயன்படுத்துபவர்கள்

குளிர்காலத்தில் contact lens dryness-ஐ அதிகரிக்கும்.

  • lens solution தவறாமல் மாற்றவும்

9. குழந்தைகளின் கண் பராமரிப்பு

  • பள்ளி செல்லும் போது dust protection glass
  • towel share செய்யக்கூடாது
  • கண் சிவப்பு இருந்தால் உடனடி பரிசோதனை

10. போதுமான தண்ணீர் குடிக்கவும்

         குளிர்காலத்தில் தாகம் குறைவாக இருந்தாலும் உடலுக்கு தேவைப்படும் தண்ணீரைத் தவறாமல் குடிக்க வேண்டும்.
அதனால் tear production சீராக இருக்கும்.

வீட்டிலேயே செய்ய வேண்டிய சிறிய கண் பாதுகாப்பு முறைகள்

  • கண்களுக்கு வெதுவெதுப்பான தண்ணீர் துடைப்பது
  • பழைய eye drops பயன்படுத்தக்கூடாது
  • கண் make-up குறைக்கவும்
  • கண்களின் அருகே மாசு வராமல் பார்த்துக்கொள்ளவும்

மருத்துவரை உடனே அணுக வேண்டியது எப்போது?

  • கண் சிவப்பு
  • தொடர்ந்து பார்வை மங்குதல்
  • எரிச்சல் குறையாமல் இருப்பது
  • கண்ணீர் அதிகரிப்பு
  • வலி
  • dryness மிக அதிகம்

இவை இருந்தால் காத்திருக்காமல் கண் நிபுணரை அணுகுவது மிக அவசியம்.

பனி கால உணவுகள் கண் ஆரோக்கியத்திற்கு உதவும்

  • சூப்
  • காய்கறிகள்
  • Dry fruits
  • பசலைகீரை
  • கரோட்ட
  • முட்டை
    இவை Vitamin A, omega-3 வழங்கும்.

முடிவுரை

பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவதால் கண் உலர்ச்சி, சிவப்பு, allergy, irritation போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சரியான பனி கால கண் பராமரிப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டால் இந்த பிரச்சனைகளை எளிதில் தவிர்க்கலாம்.

கண்களில் எரிச்சல், வலி, சிவப்பு, பார்வை மங்குதல், கண்ணீர் போன்றவை நீண்ட நேரம் தொடர்ந்தால் வீட்டில் eye drops வாங்கி பயன்படுத்தாமல் உடனே நிபுணரை அணுக வேண்டும்.

 சிறந்த பரிசோதனை, சிகிச்சை, diagnosis அனைத்திற்கும் தி ஐ ஃபவுண்டேஷனில் நிபுணர்களை அணுகலாம்

 இப்போதே முன்பதிவு செய்து கண்கள் பாதுகாப்பாக இருக்க வழிவகை செய்யுங்கள் 

Responsive image

See all Our Blogs

Card image cap
பனி கால அலர்ஜிகள்: கண் சிவத்தல் மற்றும் நீர்க்கண்ணீர் பிரச்சனைகள்

பனி காலத்தில் அலர்ஜிகள் காரணமாக ஏற்படும் கண் சிவத்தல் மற்றும் நீர்க்கண்ணீர் பிரச்சனைகள் பற்றிய காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.

Card image cap
பனி காலத்தில் குழந்தைகளின் கண் பராமரிப்பு வழிமுறைகள்

பனி காலத்தில் குழந்தைகளின் கண்களை பாதுகாக்க வேண்டிய முக்கிய பராமரிப்பு வழிமுறைகள். அலர்ஜி, உலர்ச்சி மற்றும் கண் தொற்றுகளைத் தவிர்க்க உதவும் எளிய குறிப்புகள்

Card image cap
பனிக்காலத்தில் கண்களை பாதுகாக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்

பனிக்காலத்தில் கண்களை பாதுகாக்க முக்கியமான கண் பராமரிப்பு குறிப்புகள்