Eye Foundation Team

Our Blogs

கண் கட்டி ஏன் வருகிறது, வீட்டு வைத்தியம் மற்றும் மருத்துவ சிகிச்சை

Eye Stye Home Remedies and Medical Treatment

கண் இமையோரத்துல சின்ன சிவப்பு கட்டி மாதிரி வந்து, வலி இருக்கும், தொட்டா நோகும் இதைத்தான் நாம "கண் கட்டி" அப்படின்னு சொல்றோம். இது எல்லா வயதினருக்கும் வரலாம், ஆனா தூசி, மாசு அதிகமா contact ஆகிற பேருக்கும், makeup அதிகமா உபயோகிக்கிறவங்களுக்கும் இது அடிக்கடி வரும். சரியான நேரத்துல சிகிச்சை எடுக்க வேணும்னா, முதல்ல கண் கட்டி காரணம் என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கிறது முக்கியம்.

கண் கட்டி காரணம் என்ன?

கண் இமையோரத்துல இருக்கிற சின்ன சின்ன oil glands இருக்கும் (meibomian glands, அல்லது இமை வேரோரத்துல இருக்கிற Zeis/Moll glands) இதுல ஏதாவது bacteria (பொதுவா Staphylococcus aureus) நுழைஞ்சா, அது infection ஆகி, வீக்கம் வந்து, கட்டி மாதிரி உருவாகிடும். கீழ்கண்ட பழக்கங்கள் கண் கட்டி காரணம் ஆக முடியும்:

  • கை சுத்தமில்லாம கண்ணை தொடுறது
  • பழைய அல்லது expired make-up உபயோகிக்கிறது
  • தூங்குறதுக்கு முன்னாடி makeup remove பண்ணாம இருக்கிறது
  • contact lens சரியா clean பண்ணாம போடுறது
  • Stress, சரியான தூக்கம் இல்லாம இருக்கிறது, weak immune system

 

யாருக்கு இது அதிகமா வரும்:
மேல சொன்ன கண் கட்டி காரணம் எல்லாருக்கும் ஒரே மாதிரி affect பண்ணாது சிலருக்கு இது அடிக்கடி திரும்ப திரும்ப வரும்:

  • Blepharitis (இமையோர வீக்கம்) இருக்கிறவங்களுக்கு
  • Dry eye இருக்கிறவங்களுக்கு
  • Rosacea skin condition இருக்கிறவங்களுக்கு
  • முன்னாடி stye வந்தவங்களுக்கு திரும்பி திரும்பி வர அதிக வாய்ப்பு

அறிகுறிகள்:

  • இமையோரத்துல வலி, சிவப்பு, வீக்கம்
  • சில நேரம் அரிப்பு
  • கண்ணீர் அதிகமா வருவது
  • வெளிச்சத்தை பார்க்க கஷ்டமா இருக்கும்
  • கண் இமை முழுசா திறக்கவே கஷ்டமா இருக்கும்

ஒரு வாரத்துக்குள்ள கட்டி பழுத்து, தலையில் மஞ்சள் நிற point வந்து, தானா வெடிச்சு, சரியாகி போவது சகஜம். இதை chalazion-கூட confuse பண்ணிக்கக்கூடாது chalazion வலி இல்லாம வர்ற, gland block ஆகி வர்ற ஒரு condition, அது stye மாதிரி infection இல்ல.

வீட்டு வைத்தியம்:

  • சூடான துணியை (warm compress) தினமும் 3-4 தடவை, 10-15 நிமிஷம் வைக்கிறது கட்டியை மென்மையாக்கி, தானா drain ஆக உதவும்
  • ஒரு clean cloth-ஐ warm water-ல நனைச்சு, squeeze பண்ணி, மெதுவா கண் மேல வைக்கணும்
  • கட்டியை கையால அழுத்தி பொடிக்கவே கூடாது infection spread ஆகி, cellulitis மாதிரி complication வரலாம்
  • கண் make-up, contact lens கட்டி முழுசா சரியாகும் வரை temporary-ஆ நிறுத்துறது நல்லது

மருத்துவ சிகிச்சை:

வீட்டு வைத்தியம் வேலை செய்யாம, 1-2 வாரம் கழிச்சும் கட்டி போகாம இருந்தா, வலி அதிகமா இருந்தா, அல்லது முழு கண் இமையும் வீங்கி இருந்தா உடனே தி ஐ ஃபவுண்டேஷன் (The Eye Foundation) மாதிரி அனுபவம் வாய்ந்த கண் மருத்துவமனையை பார்க்கணும். அவங்க antibiotic ointment அல்லது drops கொடுப்பாங்க, சில serious case-ல chalazion மாதிரி ஆகிடும்னா minor procedure-ஆ கட்டியை drain பண்ணணும் இது ஒரு simple, quick procedure தான், பயப்பட வேண்டியதில்ல.

தடுப்பு:

கண் கட்டி காரணம் தெரிஞ்சிருந்தா, அதை தடுக்கிறது சுலபமாகிடும்:

  • கை சுத்தமா வெச்சுக்கிறது
  • கண்ணை அடிக்கடி தொடாம இருக்கிறது
  • make-up brushes regular-ஆ clean பண்ணி வைச்சிருக்கிறது
  • தூங்குறதுக்கு முன்னாடி makeup remove பண்றது
  • contact lens hygiene சரியா follow பண்றது

திரும்ப திரும்ப stye வருதுன்னா, அதுக்கான கண் கட்டி காரணம் underlying blepharitis அல்லது dry eye-ஓட சம்பந்தப்பட்டதா இருக்கலாம் அதை தி ஐ ஃபவுண்டேஷன்-ல ஒரு தடவை டாக்டரிடம் சொல்லி check பண்ணிக்கிறது நல்லது.

Responsive image

See all Our Blogs

Headache Causes and Effects of Overuse
கார்னியா தொற்று - அலட்சியம் செய்தால் வரும் ஆபத்துகள்

Learn about common headache causes, symptoms, and the effects of overuse. Understand when headaches may require medical attention and how proper care can help manage them.

Eye Stye Home Remedies and Medical Treatment
கண் கட்டி ஏன் வருகிறது, வீட்டு வைத்தியம் மற்றும் மருத்துவ சிகிச்சை

கண் கட்டி ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள், வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பான பராமரிப்பு முறைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

Eye Redness Conjunctivitis Causes Symptoms and Treatment
கண் சிவப்பு நோய் - காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

கண் சிவப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், பொதுவான அறிகுறிகள், பரவும் விதம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.